2027 வரவு–செலவுத் திட்டம்: பாதுகாப்புத் துறையில் நவீனமயமாக்கலுக்கு முக்கியத்துவம்!
#SriLanka
#Lanka4
#budget
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் இன்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல், நவீன தொழில்நுட்பத்தைப் பாதுகாப்புப் படைகளில் பயன்படுத்துதல் மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் படையினரைத் தயார்படுத்துதல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும், பாதுகாப்புப் படையினருக்கான வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குதல், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை மற்றும் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டன.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களை ஒருங்கிணைத்து தேசிய மையமொன்றை உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே