காசாவில் நிலவும் மனிதநேய நெருக்கடி - இத்தாலி அரசின் புதிய திட்டம்

காசாவில் நிலவி வரும் கடுமையான மனிதநேய நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில், இத்தாலி அரசு “Operation Trail of Solidarity 2” என்ற பணியின் கீழ் சுமார் 100 தொன் உணவுப் பொருட்களை விமானங்களின் மூலம் காசாவுக்கு வழங்கி வைத்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை இடைவிடாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியில், இத்தாலிய விமானப்படையின் C-130 வினியோக விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த உணவுப் பொருட்கள் நேரடியாக பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பாக கிடைக்கச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இத்தாலி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “காசாவில் பொதுமக்கள் மிகப்பெரிய சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து உதவி செய்வது இத்தாலியின் கடமையாகும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த உதவி நடவடிக்கை, இந்தியா, ஜேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் பங்களிப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவுக்கு கடல் மற்றும் நிலப்பாதை வழியாக உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல முடியாத சூழல் காணப்பட்டதால் வான்வழி முறை மூலமே குறித்த உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சர்வதேச மனிதநேய அமைப்புகள், இத்தாலியின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளதோடு காசா மக்களுக்கு உடனடி உதவி கிடைத்துள்ளதாகவும், மேலும் இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



