இன்றைய ராசிபலன் (22.08.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன.

மேஷம்:
அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். அலைச்சல் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். வெளி வட்டார செல்வாக்கு உயரும். முன்னேற்றம் தேடிவரும்.
பரணி: உறவினர்கள் உங்களைத் தேடி வருவர். குடும்ப நெருக்கடி நீங்கும். முயற்சிக்கேற்ற லாபம் உண்டாகும்.
கார்த்திகை 1: சாதுரியமாக செயல்படுவீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். லாபம் அதிகரிக்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். நினைப்பது நிறைவேறும். பிறரால் லாபம் அதிகரிக்கும். புதிய வாய்ப்பு தேடி வரும்.
ரோகிணி: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். பணத்தேவை பூர்த்தியாகும். முன்னோரை வழிபட நிம்மதி உண்டாகும்.
மிருகசீரிடம் 1,2: உங்களுக்கு தடையாக இருந்தவர் விலகிச்செல்வர். நேற்றைய எண்ணம் இன்று நிறைவேறும். இழுபறியான வேலை நடக்கும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: திட்டமிட்ட வேலை நடக்கும் நாள். பிறரிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. நிதானமாக செயல்படுவது நல்லது.
திருவாதிரை: எதிர்பார்த்த பணம் வரும். குடும்ப நெருக்கடி விலகும். ஒரு சிலர் புதிய முயற்சியை மேற்கொள்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: பெரியோரின் உதவி கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். செலவு கட்டுப்படும். நேற்றைய உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
கடகம்:
புனர்பூசம் 4: குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். செயல்களிலும் கவனம் தேவை. நிதானமாக செயல்படவும்.
பூசம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்த பிரச்னையில் தீர்வு காண்பீர். திடீர் வாய்ப்பு தேடி வரும்.
ஆயில்யம்: தேவையற்ற சிந்தனை மேலோங்கும். இனம் புரியாத குழப்பத்திற்கு ஆளாவீர். வியாபாரத்தில் நிதானம் தேவை.
சிம்மம்:
மகம்: வரவு செலவில் கவனம் தேவை. வரவேண்டிய பணம் வரும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும் நாள்.
பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவு உருவாகும். சிந்தித்து செயல்பட சங்கடம் குறையும். முன்னோரை வழிபட முயற்சி வெற்றியாகும்.
உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். காணாமல் போன பொருள் கிடைக்கும். குருவால் சங்கடம் விலகும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: யோகமான நாள். வியாபாரத்தில் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரியோர் ஆதரவால் நேற்றைய பிரச்னை தீரும்.
அஸ்தம்: மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். உடல்நிலை சீராகும்.
சித்திரை 1,2: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
துலாம்:
சித்திரை 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும் நாள். உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். நேற்றைய விருப்பம் நிறைவேறும்.
சுவாதி: சிந்தித்து செயல்படுவீர். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஒரு சிலர் வேலையின் காரணமாக வெளியூர் பயணம் செல்வீர்கள்.
விசாகம் 1,2,3: தொழிலில் இருந்த போட்டி எதிர்ப்பும் விலகும். திறமையால் நீங்கள் நினைத்ததை அடைவீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கடி நீங்கும்.
விருச்சிகம்:
விசாகம் 4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். தந்தை வழி உறவால் வேலை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.
அனுஷம்: சாமர்த்தியமாக செயல்படுவீர். தடைபட்ட வேலை நடக்கும். வர வேண்டிய பணம் வரும். முன்னோர் வழிபாட்டில் பங்கேற்பீர்.
கேட்டை: பிறரை நம்பி ஈடுபடும் வேலையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.
தனுசு:
மூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சி இழுபறியாகும். நெருக்கடி அதிகரிக்கும். குரு பார்வையால் விருப்பம் பூர்த்தியாகும்.
பூராடம்: உங்கள் எதிர்பார்ப்பில் இழுபறி ஏற்படும். பண நெருக்கடியால் சங்கடம் தோன்றும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சி வேண்டாம்.
உத்திராடம் 1: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். தேவையற்ற பிரச்னை தேடி வரும். பொறுமை காப்பது நல்லது.
மகரம்:
உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். எண்ணம் எளிதாக நிறைவேறும். விரும்பியதை அடைவீர். பணத்தேவை பூர்த்தியாகும்.
திருவோணம்: வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். ஒரு சிலர் பயணம் மேற்கொள்வீர்.
அவிட்டம் 1,2: நண்பர்களால் முயற்சியில் வெற்றி காண்பீர். நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிக்கை ஏற்படும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் தேடிவருவர்.
சதயம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உற்சாகத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். நேற்று இழுபறியான வேலைகளைச் செய்து முடிப்பீர்.
பூரட்டாதி 1,2,3: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வர். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். பிரபலங்களின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.
மீனம்:
பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். பெரியோர் கூறும் ஆலோசனையை ஏற்று வெற்றி அடைவீர். குடும்ப சங்கடம் நீங்கும். முன்னோர் வழிபாடு நன்மை தரும்.
உத்திரட்டாதி: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர். தடைபட்டிருந்த வேலை நடக்கும். பணத்தேவை அதிகரிக்கும்.
ரேவதி: பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். பூர்வீக சொத்து விவகாரம் முடிவு வரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஒரு சிலர் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



