சுவிட்சர்லாந்தில் காட்சிக்கு வைக்கப்பட இருந்த சிலுவையில் அறையப்பட்ட ட்ரம்ப் சிலை

#Switzerland #America #President #statue #Trump
Prasu
3 hours ago
சுவிட்சர்லாந்தில் காட்சிக்கு வைக்கப்பட இருந்த சிலுவையில் அறையப்பட்ட ட்ரம்ப் சிலை

சுவிட்சர்லாந்தின் பேசல் ரயில் நிலையத்தில், சிலுவையில் அறையப்பட்ட ட்ரம்ப் சிலை காட்சிக்கு வைக்கப்பட இருந்தது. ஆனால், அந்தச் சிலை அங்கு பார்வைக்கு வைக்கப்படாது என தற்போது சம்பந்தப்பட்ட அருங்காட்சியகம் தற்போது தெரிவித்துள்ளது.

பிரித்தானிய கலைஞரான Mason Storm என்பவர், Saint or Sinner என அழைக்கப்படும் ட்ரம்பின் சிலை ஒன்றை உருவாக்கியுள்ளார். அமெரிக்கக் கைதிகள் அணியும் ஆரஞ்சு நிற உடை அணிந்த ட்ரம்ப், சிலுவை ஒன்றுடன் பிணைக்கப்பட்டதுபோல் காட்சியளிக்கும் அந்தச் சிலை, பேசல் ரயில் நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட இருந்தது. 

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களால் அந்தச் சிலை பேசல் ரயில் நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிலையைக் காண பெரிய அளவில் கூட்டம் கூடலாம் என எதிர்பார்க்கப்படுவதால், ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அருங்காட்சியகம் தெரிவித்துள்ளதால் அந்தச் சிலையைக் காண ஆவலுடன் காத்திருந்த கலை ஆர்வலர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!