இன்றைய ராசிபலன் (06.08.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:
அசுவினி: நினைப்பது நடந்தேறும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும்.
பரணி: நீண்டநாளாக இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: தடைகளைத் தாண்டி வெற்றியடையும் நாள். நட்பு வட்டம் விரிவடையும்.
ரோகிணி: வேகமுடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1,2: உங்கள் விருப்பம் எளிதாக நடந்தேறும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். எதிர்பாராத நெருக்கடிகளை இன்று சந்திப்பீர்.
திருவாதிரை: நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். கவனம் அவசியம்.
புனர்பூசம் 1,2,3: அலைச்சல் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.
கடகம்:
புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்களின் உதவி நன்மை தரும். நெருக்கடி விலகும்.
பூசம்: வாய்ப்பு தேடி வரும். எதிர்பார்த்த வருவாய் உண்டு. சிலர் வழிபாட்டில் பங்கேற்பீர்கள்.
ஆயில்யம்: நவீன பொருட்கள் வாங்குவீர். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.
சிம்மம்:
மகம்: செல்வாக்கு உயரும் நாள். உங்கள் முயற்சிகள் இன்று வெற்றியாகும்.
பூரம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.
உத்திரம் 1: வருமானம் அதிகரிக்கும். மறைமுகத் தொல்லைகள் விலகும். உடல்நிலை சீராகும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் சிறு தடைகள் தோன்றும்.
அஸ்தம்: குல தெய்வத்தின் அருளால் நீங்கள் எடுத்த வேலை நடந்தேறும். உறவினர்கள் உதவி கிடைக்கும்.
சித்திரை 1,2: வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வருமானம் இழுபறியாகும்.
துலாம்:
சித்திரை 3,4: வருமானத்தில் தடை உண்டாகும் என்றாலும் சமாளித்து லாபம் அடைவீர்.
சுவாதி: உங்களது முயற்சி வெற்றியாகும். நீண்ட நாள் சங்கடங்கள் விலகும்.
விசாகம் 1,2,3: வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள். பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.
விருச்சிகம்:
விசாகம் 4: அனுசரித்துச் சென்று ஆதாயம் காண வேண்டிய நாள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.
அனுஷம்: முயற்சி வெற்றியாகும். உங்கள் கனவு நனவாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
கேட்டை: குல தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்கள். அலட்சியம் தவிர்த்து செயல்படுவீர்கள்.
தனுசு:
மூலம்: குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். நவீன பொருட்கள் வாங்குவீர்.
பூராடம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர்.
உத்திராடம் 1: வேலையில் கவனம் அதிகரிக்கும். சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: அமைதி காக்க வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும்.
திருவோணம்: திட்டமிட்ட வேலைகளை மாற்றம் செய்வீர். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும்.
அவிட்டம் 1,2: துணிச்சலுடன் செயல்படுவீர்கள் என்றாலும் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும்.
சதயம்: புதிய முயற்சி இழுபறியாகும். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை.
பூரட்டாதி 1,2,3: வரவு செலவில் நெருக்கடி உண்டாகும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.
மீனம்:
பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும்.
உத்திரட்டாதி: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.
ரேவதி: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். உங்களது முயற்சியில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



