பெண் ஒருவரை விபத்துக்குள்ளாக்கி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற மாணவன்

#SriLanka #Student #Accident #Women #Hospital #Escape
Prasu
10 hours ago
பெண் ஒருவரை விபத்துக்குள்ளாக்கி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற மாணவன்

பெண்ணொருவரை விபத்துக்குள்ளாக்கி துண்டிக்கப்பட்ட காலுடன் மோட்டார் சைக்கிளில் மாணவனொருவர் தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அக்மீமன ஹினிதும்கொட கனிஷ்ட பாடசாலைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது பிள்ளைகளுடன் வீதியில் நடத்து சென்று கொண்டிருந்த பெண்ணொருவர் மீது மாணவனொருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, பெண்ணின் காலின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டு மோட்டார் சைக்கிளில் சிக்கியுள்ளது. இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய மாணவன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளான்.

தப்பிச் சென்ற மாணவன் மோட்டார் சைக்கிளில் சிக்கியிருந்த துண்டிக்கப்பட்ட காலை அருகிலுள்ள காட்டுப் பகுதியில் வீசி சென்றுள்ளார். காயமடைந்த பெண் காலி தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விரைந்து நடவடிக்கை எடுத்த அக்மீமன பொலிஸார் வீட்டில் மறைந்திருந்த மாணவனை கைது செய்து பெண்ணின் காலை காட்டுப்பகுதியில் இருந்து மீட்டுள்ளனர்.

பெண்ணின் துண்டிக்கப்பட்ட கால் பகுதி சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின்னரே வைத்தியசாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753555673.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!