திருகோணமலையில் யானை தாக்கி 53 வயது நபர் மரணம்

#Trincomalee #Death #Attack #Elephant
Prasu
15 hours ago
திருகோணமலையில் யானை தாக்கி 53 வயது நபர் மரணம்

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் காட்டுப்பகுதியில் தேன் எடுக்கச் சென்றவர் மீது யானை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே  நபரொருவர் உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய் காட்டுப் பகுதிக்கு தேன் எடுப்பதற்காக மூன்று பேர் சென்றதாகவும் இதேவேளை யானை குறித்த நபர்களை தாக்க முற்பட்டபோது மூவரும் வெவ்வேறாக பிரிந்து சென்றதாகவும் இதனை அடுத்து ஒருவரை யானை தாக்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

மொரவெவ பொலிஸார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த காட்டுப் பகுதிக்கு சென்று சடலத்தை கொண்டு வந்ததாகவும் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு யானையின் தாக்குதலினால் ஜீ.எம்.ரஞ்சித் (53வயது) ஹெல்லென-மித்தெனிய பகுதியைச் சேர்ந்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753471795.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!