சுவிட்சர்லாந்தில் தப்பியோடிய 23 வயது சிறைக் கைதி மீண்டும் கைது
#Arrest
#Switzerland
#Prison
#prisoner
#Escape
Prasu
1 month ago

சுவிஸ் மாகாணமொன்றில் பொலிசாரிடமிருந்து தப்பியோடிய சிறைக்கைதி ஒருவர் மற்றொரு மாகாணத்தில் சிக்கினார்.
கடந்த வியாழக்கிழமையன்று சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தில் 23 வயதுடைய சிறைக்கைதி ஒருவரை பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது அவர் தப்பியோடிவிட்டார்.
அவரைத் தேடும் நடவடிக்கைகளில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டுவந்தார்கள். இந்நிலையில், சூரிக் மாகாணத்தில் அவர் நடமாடுவது தெரியவரவே ஆர்காவ் மாகாண பொலிசார் அவரை மடக்கிப் பிடித்தார்கள்.
அவர் இன்னமும் கைகளில் விலங்குடனேயே நடமாடிக்கொண்டிருந்திருக்கிறார். அவரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளார்கள் பொலிசார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



