மகிழ்ச்சியான குடும்பத்திற்கான நேர்முக சிந்தனையினை உருவாக்குதல் என்ற தொனிப்பொருளில் பயிற்சிப் பட்டறை!

#SriLanka #Kilinochchi #Happy #family
Lanka4
1 week ago
மகிழ்ச்சியான குடும்பத்திற்கான நேர்முக சிந்தனையினை உருவாக்குதல் என்ற தொனிப்பொருளில்  பயிற்சிப் பட்டறை!

மகிழ்ச்சியான குடும்பத்திற்கான நேர்முக சிந்தனையினை உருவாக்குதல் மற்றும் தகவல் தொடர்பு மூலம் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான மீறலைத் தடுத்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை நேற்று(23.07.2025) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில், காலை 09.00 மணிக்கு, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.உதயனி தலைமையில் நடைபெற்றது. குறித்த பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இ.நளாஜினி மற்றும் உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக மகளிர் விவகார அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து இதனை முன்னெடுத்துள்ளன. இப் பயிற்சிப் பட்டறையின் வளவாளராக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் கலாநிதி காமினி சமரவிக்கிரம கலந்து கொண்டிருந்தார்.

இதற்கான நிதி அனுசரணையினை UNDP நிறுவனம் வழங்கியிருந்தது. இந் நிகழ்வில் சுகாதார கல்வி உத்தியோகத்தர், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் சிறுவர் பெண்கள் பிரிவுகளின் அபிவிருத்தி உத்தியோத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள், பொலிஸ் நிலையங்களின் சிறுவர் பெண்கள் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள், குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குபற்றினார்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753307268.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!