42 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கும் இலங்கை!

#SriLanka #Passport #Country #Visa #lanka4Media #LANKA4TAMILNEWS #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
1 month ago
42  நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கும் இலங்கை!

ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் இலங்கை பாஸ்போர்ட் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்து ஐந்து இடங்கள் முன்னேறி 96வது இடத்திலிருந்து 91வது இடத்திற்கு வந்துள்ளது.  

இந்நிலைியல் தற்போது, உலகில் 42 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை இலங்கை கொண்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சின் ஆலோசகர் ஹரின் பெர்னாண்டோ, 2024 ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 35 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்க இலங்கை அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். எனினும், அந்த 35 நாடுகளின் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. 

மேலும், இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய இடங்களை கருத்தில் கொண்ட “தி ஹென்லி” தரவரிசைப் பட்டியலில் இலங்கை 91வது இடத்தைப் பிடித்துள்ளது. 

இதன்படி இலங்கை 42 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கினாலும் இதனை உறுதியாக கூறமுடியாது. 

ஆனால், இலங்கை 35 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இதேவேளை இந்தியா எட்டு இடங்கள் முன்னேறி, 85வது இடத்திலிருந்து 77வது இடத்திற்கு உயர்ந்து, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அதன் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இப்போது 59 நாடுகளுக்கு விசா இல்லாத அல்லது விசா-ஆன்-அரைவல் அணுகலை அனுபவிக்கின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1753222781.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!