2 கிலோ குஷ் கஞ்சாவுடன் ராஜகிரியவில் ஒருவர் கைது!

#Corona Virus #Arrest #Cannabis
Lanka4
1 week ago
2 கிலோ குஷ் கஞ்சாவுடன் ராஜகிரியவில் ஒருவர் கைது!

ராஜகிரியவில் சுமார் 12 மில்லியன் ரூபா மதிப்புள்ள 2 கிலோ குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் கலால் துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இ்நதக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் ராஜகிரிய பகுதியில் நேற்று (22) சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

அதன்போது 2 கிலோகிராம் “குஷ்” கஞ்சா வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பன்னிபிட்டியவின் தலவதுகொடவைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலஸார் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753222781.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!