முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவது எப்போது?

#India #M. K. Stalin #Hospital #Politics
Soruban
10 months ago
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவது எப்போது?

தலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். "உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆர்.அழகு மீனா, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியதோடு, இதுவரை அம்மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் போன்றவை குறித்து மாவட்ட கலெக்டர்களிடம் கேட்டறிந்தார்.

அத்துடன் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மனுக்கள் அளிக்க வருகை தந்த பயனாளிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிவாயிலாக கலந்துரையாடி, அவர்களது கோரிக்கைகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் பயனாளிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். தலைமைச் செயலாளர் முருகானந்தமிடம் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு . பல்வேறு கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் அளித்தார். இந்நிகழ்வின் போது கூறப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1753222781.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4