யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை செலுத்தியவர் உயிரிழப்பு!
#SriLanka
#drugs
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
10 months ago
யாழில், 5 ஆண்டுகளாக ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த 26 யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞன் ஒருவர் நேற்றுமுன்தினம் (19) உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் – சிவலிங்கப் புளியடியைச் சேர்ந்த செ.பிரசாந்தன் (வயது 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றுமுன்தினம் (19) மயக்கமடைந்த நிலையில் வீட்டில் காணப்பட்டுள்ளார்.
நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
