பூமிக்குள் நுழைந்த செவ்வாய் கிரக கல் - ஏலத்தில் விடுவதாக நியூயோர் அறிவிப்பு!

#Newyork #world_news #Earth
Lanka4
9 hours ago
பூமிக்குள் நுழைந்த செவ்வாய் கிரக கல் - ஏலத்தில் விடுவதாக நியூயோர் அறிவிப்பு!

பூமியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய அளவிலான கல் ஒன்றை நியூயோர்க்கை சேர்ந்த நிறுவனமொன்று ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது. செவ்வாய்க் கிரகத்தின் கல் ஒன்று பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்துள்ளது. 

பூமிக்கு நுழைந்த போது பூமியின் அதிக வெப்பத்தால் குறித்த கல் எரிந்து உருமாறியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமிக்குள் நுழைந்து கண்ணாடி போன்று பளபளப்பாகக் காணப்படுகின்ற செவ்வாய்க் கிரக கல்லினை ஏலத்தில் விடுவதற்கு நியூயோர்க்கை சேர்ந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

அதன்படி குறித்த கல்லை இந்திய மதிப்பில் 1.7 கோடி ரூபா ஆரம்ப தொகைக்கு ஏலம் விடுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை செவ்வாய் கிரக கல்லுடன் சேர்த்து நியூயோர்க்கின் ஏல நிறுவனம், சிறிய டைனோசரின் என்புக் கூட்டையும் ஏலத்தில் விடவுள்ளது. குறித்த என்புக் கூடு அமெரிக்காவின் வியோமிங் மாநிலத்தில் 1996 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் ஆரம்ப ஏல தொகையாக, இந்திய மதிப்பில் 3.3 கோடி ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய செவ்வாய்க்கிரக கல் மற்றும் டைனோசரின் என்புக்கூடு ஆகிய இரண்டு பொருட்களும், எதிர்வரும் 16ஆம் திகதி ஏலத்திற்கு விடப்படுகின்றன என்று நியூயோர்க் நிறுவனம் அறிவித்துள்ளது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1753047536.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!