பிறந்த குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயர் அமைவது எப்படி?

பிறந்த குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயர் அமைவது
என்பதும் அதிர்ஷ்ட பெயர் அமைப்பது என்பதும் நம்முடைய கைகளில் இல்லை .
அதிர்ஷ்ட பெயரின் மூலம் அந்த குழந்தை பலன் அடைவது குழந்தைகளின் ஜாதகத்தில்
உள்ள விதிப்பலன் ஆகும் .
உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும்
அதிர்ஷ்ட பெயரை வைத்துக்கொண்டு பலன் அடைவது இல்லை . அந்த குழந்தையின்
ஜாதகத்தில் அதிர்ஷ்ட பெயர் மூலம் பலன் அடையவேண்டும் விதி பலன் உள்ள
குழந்தைகள் மட்டுமே பெற்றோர்கள் மூலம் ஜோதிடரை அணுகுகிறார்கள் .
ஒரு
குழந்தையின் அதிர்ஷ்ட பெயர் என்பது ஆயிரம் விஷயங்களை உள்ளடக்கியது .
ஆயிரம் பேர் பங்கு கொள்ளும் ஒரு இன்டர்வியூவில் ஒருவர் மட்டும் தேர்வாகி
இருக்கிறார் என்றால் அங்கே அவரின் அதிர்ஷ்ட பெயர் முன்னிலை வகிக்கிறது .
ஒரு
குழந்தைக்கு அமையும் அதிர்ஷ்ட பெயர் குழந்தையின் ஆரோக்யம்
புத்திசாலித்தனம் குழந்தையின் ஆயுள் குழந்தையின் குடும்ப நலன் குழந்தையின்
படிப்பு பிற்காலத்தில் குழந்தையின் வேலை வாய்ப்பு திருமண விஷயம் போன்ற
எதிர்கால பலன்களில் முன்னின்று மேன்மையை தருகிறது.
WAR என்ற உச்சரிப்பு அலைகளை கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் போராட்டமயமாகஅமையும்
உதாரண பெயர் - PUWANESHWARAN (புவனேஷ்வரன் )
VIN என்ற உச்சரிப்பு அலைகளை கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் அனைத்து சூழ்நிலைகளிலும் வெற்றிகரமாகஅமையும்
உதாரண பெயர் - MELVIN (மெல்வின்)
IL (ILL ) என்ற உச்சரிப்பு அலைகளை கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் நோயை பற்றிய பய உணர்ச்சி அதிகம் கொண்டதாகஅமையும் .
உதாரண பெயர் - KAPIL (கபில்) KABILKANTH (கபில்காந்)
D என்ற எழுத்தை ஆரம்ப எழுத்தாக கொண்ட குழந்தைகளின் வாழ்வு அபாயம் மிக்கதாக அமையும்.
உதாரண பெயர் - DHINESH (தினேஷ் ) DHIVYA (திவ்யா )
NO என்ற உச்சரிப்பு அலைளை கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் எதிலும் நல்ல பலன் இல்லாத சூழ்நிலையையும் - உண்டாக்கும் .
உதாரண பெயர் - MANOHAR (மனோகர் )
குழந்தைகளின்
பெயர் எண்ணும் பெயரின் ஹீப்ரு எண்ணும் ஊனமுள்ள கிரகங்களின் ஆதிக்க
எண்களில் அமையும்பொழுது குழந்தையின் உடல் உறுப்புகளில் ஊனத்தை ஏற்படுத்தும்
விபரீதமான சம்பவங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தில் உண்டாகலாம் .
உதாரணத்துக்கு
சனியின் ஆதிக்க எண்களான கூட்டு எண் 8 க வரும் எண்கள் . ராகுவின் ஆதிக்க
எண்களான கூட்டு எண் 4 க வரும் எண்கள் போன்றவைகளாகும் .
இதில்
சுக்ரன் கிரகத்தை குறிக்கும் 6 ம் எண் சுப கிரகத்தின் ஆதிக்க எண் என்றாலும்
இந்த எண்ணை குறிக்கக்கூடிய சுக்ரன் கிரகத்துக்கு ஒரு கண் ஊனம் என்பதால்
ஜாதகத்தை நன்கு பரிசீலனை செய்து குழந்தைக்கு பெயரை சூட்டவேண்டும் .
LAKS என்ற உச்சரிப்பு அலைகளை பெயரில் கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் செல்வ வளமிக்கதாக அமையும் .
உதாரண பெயர் - LAKSHAN (லக் ஷன் ) LAKSHITHA (லக் ஷிதா )
MAR என்ற உச்சரிப்பு அலைகளை பெயராக கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் எதாவது ஒரு அழிவு பாதையை நோக்கி செல்லும்.
உதாரண பெயர் - KUMARAN (குமரன் ) - KUMAR (குமார் )
இன்னும் பல உதாரணங்களை பல பெயர்கள் மூலம் எடுத்து காட்டலாம் .
ஒரு
குழந்தைக்கு அமைய இருக்கும் அதிர்ஷ்ட பெயர் என்பது இவ்வளவு விஷயங்களை
உள்ளடக்கியது . அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் அதிர்ஷ்ட பெயரில் குழந்தைகளின்
எதிர்காலத்தில் நடக்கும் நல்ல பலன்களில் பெற்றோர்கள் நீங்கள் அக்கறை
கொள்ளுங்கள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



