அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அரிய வகை நோயால் பாதிப்பு

#Hospital #America #Disease #President #WhiteHouse
Prasu
2 hours ago
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அரிய வகை நோயால் பாதிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு அறிவயவகை நரம்பு சார்ந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 79 வயதான டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் இரண்டாவது முறையாக அதிபர் பொறுப்பேற்றார்.

இதுவரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர்களிலேயே நான்தான் மிகவும் ஆரோக்கியமான அதிபர் என்று டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 13 ஆம் தேதி நியூ ஜெர்சியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்து கொண்ட டிரம்ப்பின் கால்களில் வீக்கம் இருப்பதை போன்ற புகைப்படம் வைரலானது.

இந்த வார தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் பஹ்ரைன் பிரதமருடன் டிரம்ப் கை குலுக்கிய புகைப்படத்தில், அவரது கைகளில் காயம் காயம் காணப்பட்டது இதையடுத்து, டிரம்ப்பின் உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, டிரம்ப் நாள்பட்ட சிரை (ரத்த நாளம்) குறைபாடு (chronic venous insufficiency) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

அவருக்கு ரத்த நாள சோதனை உள்பட விரிவான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இது கண்டறியப்பட்டுள்ளது. தீவிரமான நரம்பு பிரச்னை எதுவும் இல்லை, அனைத்து பரிசோதனை முடிவுகளும் பாசிட்டிவாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752856587.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!