சுவிஸ் குடியுரிமை பெற அதிக ஊதியம் அவசியமா?

#Switzerland #Salary #money #citizenship #Rule
Prasu
3 hours ago
சுவிஸ் குடியுரிமை பெற அதிக ஊதியம் அவசியமா?

பொதுவாகவே குடியுரிமை பெறுவது குறித்து எழும் கேள்விகளில் ஒன்று வருவாய் குறித்ததாக இருக்கும். ஸ்வீடன், ஜேர்மனி போன்ற சில நாடுகளில் பணி அனுமதி மற்றும் குடியுரிமை பெற குறைந்தபட்சம் இவ்வளவு ஊதியம் பெறவேண்டும் என்ற விதி உள்ளது.

ஆனால், சுவிட்சர்லாந்தில் ஒருவர் குடியுரிமை பெற இவ்வளவு வருவாய் உடையவராக இருக்கவேண்டும் என்று கூறும் விதிகள் இல்லை.

அதே நேரத்தில், சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர் தனது தேவைகளை சந்திக்கும் வகையில் போதுமான வருவாய் உடையவராக இருக்கவேண்டும் என்றொரு சட்டம் உள்ளது.

அதாவது, அவர் அரசின் நிதி உதவியை பெறும் நிலையில் இல்லாமல், தன் தேவைகளை தானே சந்தித்துக்கொள்ளும் அளவுக்கு வசதி உடையவராக இருக்கவேண்டும்.

இந்த விதி, மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. சுவிட்சர்லாந்தில் ஓய்வு காலத்தை செலவிட விரும்புபவர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752826356.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!