இலவச மசாஜ்! பணிப்பெண்களுடன் தகராறில் ஈடுபட்ட மூன்று பொலிஸார் பணி நீக்கம்

#SriLanka #Police #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
4 hours ago
இலவச மசாஜ்! பணிப்பெண்களுடன் தகராறில் ஈடுபட்ட மூன்று பொலிஸார் பணி நீக்கம்

இலவசமாக மசாஜ் சேவையை வழங்குமாறு மசாஜ் நிலைய உரிமையாளர் மற்றும் பணிப்பெண்களுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 மாத்தறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மூன்று பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மூவரும் மாத்தறை – வல்கம பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றுக்கு சென்று தங்களுக்கு இலவசமாக மசாஜ் சேவையை வழங்குமாறு கோரி மசாஜ் நிலைய உரிமையாளர் மற்றும் பணிப்பெண்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

 இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேக நபர்களான மூன்று பொலிஸ் அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மாத்தறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752789402.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!