சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்த சந்தேகநபர் கைது!
#SriLanka
#Arrest
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
5 hours ago

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் சரணாலயத்தின் உரிமையாளர் இன்று (17.07) கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் சமீபத்தில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த மோட்டார் சைக்கிள்கள் ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ. 15 மில்லியனுக்கும் அதிகமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், இந்த விலங்கு பண்ணையின் மேலாளர் மற்றும் சேமிப்பாளரையும் பறவைகள் சரணாலய வளாகத்தில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 04 கஞ்சா செடிகளுடன் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 40 மற்றும் 50 வயதுடைய மாத்தறை மற்றும் மித்தேனியா பகுதிகளில் வசிப்பவர்களாவர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




