நிமிஷா பிரியாவை தூக்கிலிட வேண்டும் - மஹ்தியின் சகோதரர் ஆக்ரோஷம்

#Murder #Court Order #Women #Kerala #Yemen
Prasu
3 hours ago
நிமிஷா பிரியாவை தூக்கிலிட வேண்டும் - மஹ்தியின் சகோதரர் ஆக்ரோஷம்

ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நிமிஷா பிரியாவின் முன்னாள் தொழில் கூட்டாளியான, கொலையுண்ட தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா மஹ்தி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தலால் அப்தோ மஹ்தி கொலை வழக்கில் நிமிஷா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஜூலை 16ஆம் தேதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. 

ஆனால், அவரது மரண தண்டனையை ஏமனின் உள்ளூர் நிர்வாகம் ஒத்திவைத்துள்ளது. இப்போது தலால் மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா மஹ்தி, "தலால், நிமிஷாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தார், அவரை மிரட்டினார் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை" என்று குறிப்பிட்டுளளார்.

தனது சகோதரர் தலால், நிமிஷாவை 'கொடுமைப்படுத்தியதாக' வந்த செய்திகள் வெறும் வதந்தி என்றும் அப்தெல் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் 'சமரசம்' குறித்த கேள்விக்கு, அதாவது நிமிஷா பிரியாவை மன்னிப்பது குறித்து பேசிய அப்தெல், "அவரை மன்னிப்பதற்கான முயற்சிகள் குறித்த எங்கள் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது. 

இந்த வழக்கில் 'கடவுளின் சட்டம்' செயல்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதை விடக் குறைவான எதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்." என்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752699606.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!