மன்னாரிற்கு திடீரென விஜயம் மேற்கொண்ட அமைச்சர்!
#SriLanka
#Mannar
#Minister
#Lanka4
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
2 months ago

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கிராமத்தில் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறைபடுத்துவதற்கு அமைச்சர்கள் ஒருங்கிணைந்ததாக நேற்று(13) கள விஜயத்தை மேற்கொண்டனர்.
இதன்போது அரச திணைக்கள அதிகாரிகளால் பாலியாறு குடிநீர் திட்டம் தொடர்பான விளக்கம் அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குறித்த திட்டம் நடை முறைப் படுத்தப்படும் பிரதேசத்தினை அமைச்சர் குழுவினர் சென்று பார்வையிட்டனர்
குறித்த கள விஜயத்தில் வனவள மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் மற்றும் வீடு அமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் , மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ,நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் அரச உயர் அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் கிராம் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



