இலங்கையின் மிகவும் ஆபத்தான குற்றவாளி மலேசியாவில் கைது!
#SriLanka
#Malasia
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 months ago
இலங்கையின் மிகவும் ஆபத்தான குற்றவாளியாக கருதப்படும் பாதாள உலக தலைவரான கெஹல்பத்தர பத்மே, மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெஹல்பத்தர பத்மே, மொமாண்டோ சாலிந்த மற்றும் ஹரக்கட்டாவின் மனைவியுடன் கைது செய்யப்பட்டதாக மலேசிய தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி மலேசியா வழியாக தாய்லாந்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது மலேசிய பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த தகவல்களை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
