உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த பிள்ளையான்! அம்பலப்படுத்திய அமைச்சர்

#SriLanka #Parliament #Easter Sunday Attack #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
5 days ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த பிள்ளையான்! அம்பலப்படுத்திய அமைச்சர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே நன்கு அறிந்துவைத்திருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 

 இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை வௌிப்படுத்தினார். சிறையில் அவர் இருக்கும்போதே இதனை அறிந்து வைத்திருந்தார் என்பதற்கான தகவல்களும் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

 "யோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த சிவனேசதுறை சந்திரகாந்தன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற வேளை மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்தார். 

 அந்நேரம் பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னரே தெரியும் என்பதற்கான தகவல்கள் தற்போது வௌியாகியுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் வேளையில், அதில் சதித்திட்டம் ஒன்று உள்ளமை தொடர்பில் கண்டுபிடிக்க, தற்போது நீண்ட விசாரணை ஒன்று நடைபெற்று வருகின்றது. 

 அதனால் குறுகிய காலத்தில் நீதிமன்றத்துக்கு பல விடயங்கள் முன்வைக்கப்படும்" என்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752012950.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!