இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் - ஜுலையில் மாத்திரம் 36 ஆயிரம் பேர் வருகை!
#SriLanka
#Tourist
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
12 hours ago

ஜூலை 2025 முதல் 6 நாட்களில் 36,002 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இதுவரை 1,204,046 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இதே நேரத்தில், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாட்டின் சுற்றுலா வருவாய் 1.71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று இலங்கை மத்திய வங்கி கூறுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



