செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!
#SriLanka
#Jaffna
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
5 hours ago

யாழ்ப்பாணம் அரியலை சித்துப்பாத்தி செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று வரை 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
அதில் 34 முழுமையாகவும், 4 பகுதியளவு எச்சங்களாகவும், 2 சிறுவர்களுடையதாகவும் இனங்காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் 8 ஆம் நாள் அகழ்வு நடவடிக்கை இன்று நடைபெற்றது.
அதில் முக்கியமாக, செய்மதிமூலம் இனங்காணப்பட்ட புதிய பகுதியில், அகழ்வுபணிகள் இடம்பெற்றன அதில் ஆரம்பத்தில் ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன என சட்டத்தரணியி நிரஞ்சன் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



