நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த இளைஞன் திடீர் மரணம்! யாழில் சம்பவம்
#SriLanka
#Jaffna
#drugs
#Lanka4
Mayoorikka
5 hours ago

யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய திருநாவுக்கரசு துஜீவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர். இந்நிலையில் குறித்த இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.
இருப்பினும் குறித்த இளைஞன் உயிரிழந்தார்.
அவரது நண்பர்கள் சிலர் தலைமறைவாகிய நிலையில் சுன்னாகம் பொலிஸ் அவர்களை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



