12 நாட்களில் $800 மில்லியன் செலவிட்ட அமெரிக்கா - ஏன்?

#America #Weapons #Missile #Dollar #Israel
Prasu
11 months ago
12 நாட்களில் $800 மில்லியன் செலவிட்ட அமெரிக்கா - ஏன்?

இஸ்ரேல் ஈரானின் அணுஆயுத திட்டத்தில் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, ஈரான் மீது அதிரடி தாக்குதல் நடத்த தொடங்கியது. இதற்கு பதிலடியாக ஈரான் அதிநவீன ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த தொடங்கியது. 

இதனால் போர் மூண்டது. 12 நாட்களாக நடைபெற்ற போர் பின்னர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வந்தது. 

ஏவுகணைகளை இடைமறித்து அளிக்கும் THAAD சிஸ்டம் அல்லது மேம்படுத்தப்பட்ட ஏவுகணை எதிர்ப்பு திட்டத்தை இஸ்ரேலில் குவித்தது. ஈரான் ஏவுகணைகளை இந்த THAAD ஏவுகணைகள் இடைமறித்து அளித்தன. 

ஈரான் காத்ர், இமாத், கெய்பர் ஷேகன், பட்டா-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இவற்றை 60 முதல் 80 முறை அமெரிக்காவின் THAAD ஏவுகணை சிஸ்டம் இடைமறித்து அளித்ததாக ராணுவ கண்காணிப்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் THAAD சிஸ்டத்தை பயன்படுத்த 12 முதல் 15 மில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவாகும்.

12 நாட்களாக நடைபெற்ற சண்டையில் அமெரிக்கா ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அளிக்க 810 மில்லியன் முதல் 1.215 பில்லியன் டாலர் வரை செலவு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1751133991.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4