மேற்கத்திய நாடுகள் மீது ரஷ்ய ஜனாதிபதி புதின் குற்றச்சாட்டு

#Russia #Country #Putin #President #West
Prasu
11 months ago
மேற்கத்திய நாடுகள் மீது ரஷ்ய ஜனாதிபதி புதின் குற்றச்சாட்டு

யூரேசியன் பொருளாதார யூனியன் (EAEU) மாநாட்டில் கலந்து கொண்ட ரஷியா அதிபர் புதின், ரஷியாவில் பிரிவினைவாதத்தை மேற்கத்திய நாடுகள் ஊக்கப்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.

ஐ.எஸ். (Islamic State), ரஷியாவுக்கு எதிராக செயல்படும் வரை யாரும் அதன்மீது கவனம் செலுத்தவில்லை. மாஸ்கோவில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இன்னும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

யாரும் இதில் கவனம் செலுத்த விரும்புவதில்லை. ரஷியாவிற்கு எதிராக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் என்று விரும்பினர். நமது நாட்டில் பிரிவினைவாதத்தை கூட்டு மேற்கத்திய நாடுகள் ஊக்குவித்தபோது, பயங்கரவாதம் போன்ற தாக்குதல் நடத்த அது ஒரு கருவியாக இருந்தது.

பின்னர் ரஷியா தொலைக்காட்சியில் "உக்ரைன் மோதலில் தீர்வு காண்பது மற்றும் நேட்டோ செலவினத்தை விரிவுப்படுத்துதல் தொடர்பான அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு தொடர்ந்து சதி செய்து வருகிறது.

ரஷியாவின் ஆக்கிரமிப்புத்தன்மையை சுட்டிக்காட்டி, நேட்டோ தற்போது அதன் உறுப்பினர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக பாதுகாப்பு செலவினங்களை உயர்த்தவும், ஐரோப்பாவில் ராணுவக் கட்டமைப்பை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. 

இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடும்போது அந்த அமைப்பின் உறுப்பினர்கள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றுகிறார்கள். சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு நாங்கள் எவ்வாறு வந்துள்ளோம் என்பது பற்றி யாரும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை" எனப் பேசியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1751128719.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4