கிளிநொச்சி வைத்தியசாலையில் மிகவும் அசுத்தமான நிலையில் உள்ள மலசலகூடம்!
#SriLanka
#Kilinochchi
#Hospital
#Lanka4
#Toilet
#SHELVAFLY
Mayoorikka
11 months ago
கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பார்வையாளர் கூடத்திற்கு அருகாமையில் உள்ள மலசல கூடம் மற்றும் கைகழுவும் இடம் நோயாளர்கள் பாவிக்க முடியாத நிலையில் சுகாதாரமற்ற நிலையில் மிகவும் அசுத்தமான நிலையில் உள்ளதாக அங்கு சென்ற நோயார்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மலசலகூடங்கள் மற்றும் கைகழுவும் பகுதிகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் குறித்த பகுதியில் நோய்த் தொற்றுகள் பரவுவதற்கு வழிவகுக்கும் அபாயமும் காணபப்டுகின்றது.

இது நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மத்தியில் ஒரு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர் உடனடியாக இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, சுகாதாரமான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
