இன்றைய ராசிபலன் (28.06.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (28.06.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்
அசுவினி: நெருக்கடி நீங்கி நன்மை காணும் நாள். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வெளியூர் பயணத்தில் கவனம் தேவை.
பரணி: உழைப்பு அதிகரித்தாலும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நிதி நிலை உயரும்.
கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். கவனமாக செயல்பட்டு வேலைகளை வெற்றியாக்குவீர். வருமானம் திருப்தி தரும். 

ரிஷபம்
கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி பெறுவீர். உங்கள் முயற்சி நிறைவேறும். நினைத்ததை சாதிப்பீர்.
ரோகிணி: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த லாபம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
மிருகசீரிடம் 1,2: யோசித்து செயல்படுவீர்கள். முயற்சி லாபமாகும். நம்பிக்கை அதிகரிக்கும். தடை விலகும். வருமானம் கூடும். 

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வரவு செலவில் கவனமாக இருப்பது நல்லது. உறவினரால் செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.
திருவாதிரை: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். ஒருசிலர் புதிய முயற்சியை மேற்கொள்வீர். வருமானம் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3: வியாபாரம் முன்னேற்றம் அடையும் செலவிற்கேற்ற வரவு வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். திட்டமிட்ட வேலை நடக்கும். 

கடகம்
புனர்பூசம் 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.
பூசம்: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் செயல்களில் குழப்பம் உண்டாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
ஆயில்யம்: முயற்சியால் ஆதாயம் தோன்றும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். சிறு வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும். 

சிம்மம்
மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். விரய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.
பூரம்: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உடன் வேலைப் பார்ப்போரின் ஒத்துழைப்பு கிடைக்கும். திடீர் செலவு தோன்றும்.
உத்திரம் 1: எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர். வியாபாரத்தில் சில பிரச்னை தோன்றும். வார்த்தைகளில் நிதானம் அவசியம். 

கன்னி
உத்திரம் 2,3,4: லாபமான நாள். அமைதியாக செயல்பட்டு லாபம் காண்பீர். நீங்கள் எதிர்பார்த்த பணம்வரும். முயற்சி வெற்றியாகும்.
அஸ்தம்: நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர். பொருளாதார நிலை உயரும். நினைத்திருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். உங்கள் கனவு நனவாகும்.
சித்திரை 1,2: நேர்மையாக செயல்பட்டு லாபம் காண்பீர். வியாபார விருத்திக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். 

துலாம்
சித்திரை 3,4: நினைப்பது நடக்கும் நாள். தடைகளைத் தாண்டி வெற்றி காண்பீர். சுறுசுறுப்பாக செயல்பட்டு முயற்சியில் லாபம் அடைவீர்.
சுவாதி: பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்னை விலகும். இழுபறியாக இருந்த விவகாரம்  சாதகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3: செய்துவரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். செயல்களில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும். 

விருச்சிகம்
விசாகம் 4: நெருக்கடி நீங்கும் நாள். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
அனுஷம்: மனக்குழப்பம் விலகும். செயல்களில் லாபம் தோன்றும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெரியோர் உதவியால் வேலை நடக்கும்.
கேட்டை: பழைய பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். சங்கடங்களைக் கடந்து சாதனைப் புரிவீர். 

தனுசு
மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும்.
பூராடம்: மனக்குழப்பம் ஏற்படும். நன்றாகப் பழகியவர்களும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
உத்திராடம் 1: சந்திராஷ்டமம் தொடர்வதால் விழிப்புடன் செயல்படுவது நல்லது. உங்கள் முயற்சி நிறைவேற கடுமையாக உழைப்பீர். வேலை இழுபறியாகும். நெருக்கடி அதிகரிக்கும். 

மகரம்
உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். மறைமுக எதிர்ப்பு விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவீர்.
திருவோணம்: நேற்றைய முயற்சி இன்று நிறைவேறும். பொருளாதார சிக்கல் நீங்கும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.
அவிட்டம் 1,2: எதிலும் இன்று அவசரம் வேண்டாம். சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப நிதானமாக செயல்படுவது நல்லது. 

கும்பம்
அவிட்டம் 3,4: சாதகமான நாள். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். உங்கள் வேலைகளில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
சதயம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். போட்டியாளர் விலகிச் செல்வர். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் விருப்பம் பூர்த்தியாகும்.
பூரட்டாதி 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். இழுபறியாக இருந்த வேலை முடியும். 

மீனம்
பூரட்டாதி 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். 
உத்திரட்டாதி: பிள்ளைகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சொத்து சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
ரேவதி: இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.  செல்வாக்கு உயரும் நாள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1751062409.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!