ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட யாழ் இளைஞர்கள் கைது!
#SriLanka
#Arrest
#Airport
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
11 months ago
போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி ஐரோப்பிய நாட்டிற்கு தப்பி செல்ல முற்பட்ட இரு இளைஞர்கள் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களுக்கும் இத்தாலிக்கு சென்று, பின்னர் அங்கிருந்து வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் நோக்கத்தோடு பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழு அவர்களை சோதனைக்கு உட்படுத்தியதில், அவர்கள் போலி கடவுச்சீட்டுடன் பயணிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 21 மற்றும் 28 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலுதிக விசாரணைகளுக்காக அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
