இந்தோனேசியா எரிமலையில் சிக்கி பிரேசில் சுற்றுலா பயணி மரணம்
#Tourist
#Women
#Indonesia
#Brazil
#volcano
Prasu
4 months ago
இந்தோனேசியா எரிமலையில் சிக்கி பிரேசில் சுற்றுலா பயணி பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரேசில் நாட்டை சேர்ந்த 26 வயதான ஜூலியானா மரின்ஸ் என்ற பெண் ஒரு குழுவுடன் சேர்ந்து இந்தோனேசியாவின் ரிஞ்சனி எரிமலையில் ஜூன் 21 ஆம் தேதி மலையேற்றம் செய்துள்ளார்.
அப்போது திடீரென ஜூலியானா மரின்ஸ் அங்குள்ள ஒரு பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இந்த தகவல் அறிந்த இந்தோனேசிய மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
டிரோன் மூலம் ஜூலியானா மரின்ஸ் உயிருடன் இருப்பதை கண்டறிந்த மீட்புப்படையினர் அவரை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் அவரை உயிருடன் மீட்கமுடியவில்லை. ஜூன் 24 ஆம் தேதி ஜூலியானா மரின்ஸ் சடலத்தை மீட்பு படையினர் கண்டுபிடித்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
