அமெரிக்காவை எதிர்க்க யாரும் துணிந்தது இல்லை நாங்கள் எதிர்த்தோம் - ஈரான்

#America #Attack #Iran #Ambassador
Prasu
1 year ago
அமெரிக்காவை எதிர்க்க யாரும் துணிந்தது இல்லை நாங்கள் எதிர்த்தோம் - ஈரான்

அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைக்க எந்த நாடும் துணிந்ததில்லை. ஆனால், நாங்கள் அதைச் செய்தோம் என இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் எலாஹி தெரிவித்தார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் எலாஹி, "வரலாற்றில் எந்த நாடும் அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்ததில்லை. ஈரான் அதைச் செய்துள்ளது.

இதை ஒரு குறியீட்டு பதிலடியாக நீங்கள் எண்ணிக்கொள்ளுங்கள். ஆனால், அமெரிக்கா இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கையை மீண்டும் செய்தால், அதற்கும் இதேபோன்ற பதில்தான் கிடைக்கும்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நம்பகமானவர் அல்ல. அவர் ஈரானுக்கு எதிராக ராணுவத் தாக்குதலைத் தொடங்கினார். 

அவர் ஈரானில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து தாக்கினார். 

அவர் சர்வதேச சட்டங்களையோ, மனிதாபிமான சட்டங்களையோ மதிக்கவில்லை. எனவே, இஸ்ரேலின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று இராஜ் எலாஹி கூறினார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750790853.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4