இந்தியா மீது போர் தொடுப்போம் - பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரி எச்சரிக்கை

#India #water #Pakistan #War #Warning
Prasu
1 year ago
இந்தியா மீது போர் தொடுப்போம் - பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரி எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா அதிரடியாக எடுத்தது. 

குறிப்பாக பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது. பாகிஸ்தானில் 80 சதவீத விவசாயம் சிந்து நதி நீரை நம்பியே உள்ளதால், இந்தியா எடுத்த முடிவு பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்தது. 

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யும் முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. எனினும், இதனை ஏற்க முடியாது என்று இந்தியா கூறி வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ, இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்ற ரீதியில் ஆவேசமாக கூறியுள்ளார். 

இது தொடர்பாகப் பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ கூறியதாவது: "சிந்து நதிநீர் உடன்படிக்கையின் கீழ் பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை இந்தியா மறுத்தால் பாகிஸ்தான் போருக்குச் செல்லும். இந்தியாவின் நடவடிக்கையை ஏற்க முடியாது. உடன்படிக்கையைச் சட்டவிரோதமாக இந்தியா நிறுத்தியதற்குப் பதிலடி கொடுப்போம் . 

இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, தண்ணீரை நியாயமாகப் பகிர்ந்து கொள்வது, அல்லது ஆறு நதிகளிலிருந்தும் தண்ணீரை நாங்கள் பெறுவோம். சிந்து நதி உடன்படிக்கை முடிந்துவிட்டதாகவும், அதில் இருந்து வெளியேறி விட்டதாகவும் இந்தியா கூறுவது சட்டவிரோதமானது" என்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750788295.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4