நைஜீரியாவிலிருந்து பெற்றோலை இறக்குமதி செய்ய நடவடிக்கை!
#SriLanka
#Fuel
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
5 months ago
மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதற்றம் காரணமாக, நைஜீரியாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இலங்கை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல்-ஈரான் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக மசகு எண்ணெய் விலையும் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்தே, நைஜீரியா மற்றும் வேறு சில எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து மாதிரி தயாரிப்புகளைப் பெற்று, அவற்றின் நம்பகத்தன்மையை உள்ளூர் ஆய்வகங்களில் சோதிக்குமாறு தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருண தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
