தனது 106 குழந்தைகளுக்கும் சொத்தில் பங்கு வழங்கும் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்

#Telegram #sperm #CEO #assets
Prasu
1 year ago
தனது 106 குழந்தைகளுக்கும் சொத்தில் பங்கு வழங்கும் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்

பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

என்றும் இளமையாக இருக்க அவர் எடுத்துக்கொள்ளும் அசாதாரணமான முயற்சிகளுக்கு பாவெல் பிரபலமானவர். ரஷிய நாட்டவரான இவர் துபாயில் டெலிகிராம் தலைமையகத்தை அமைத்து பணியாற்றி வருகிறார். 

இதற்கிடையே தனது விந்தணு தானத்தின் மூலம் உலகம் முழுவதும் 12 நாடுகளில் 100 பேர் பிறந்ததாக பரபரப்பான அறிவிப்பை சில காலம் முன் அவர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தனது சொத்துக்கள் தனது அனைத்து குழந்தைகளுக்கும் சமமாகப் பிரிப்பதாக பாவெல் அறிவித்துள்ளார். 

இதற்காக சமீபத்தில் ஒரு உயில் எழுதியுள்ளதாகவும் பாவெல் கூறினார். பாவெல் வெளிப்படுத்திய விவரங்களின்படி, அவர் திருமணமாகவில்லை என்றாலும், அவர் மூன்று பெண்களுடன் வசித்து வருகிறார். அவர்களுடன் அவருக்கு உயிரியல் ரீதியாக ஆறு குழந்தைகள் உள்ளனர். இந்த ஆறு பேரைத் தவிர, விந்தணு தானம் மூலம் பிறந்த 100 குழந்தைகளுக்கும் அவர் தந்தையானார். 

அனைவரும் தனக்கு சமம் என்றும், யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அதனால்தான் அவர்கள் அனைவருக்கும் தனது சொத்தில் சம பங்கு இருக்கும் என்று பாவெல் கூறினார்.

தனது வாழ்க்கை சவால்களால் நிறைந்தது என்று கூறும் 40 வயதான பாவெல் தனது உயிலை எழுதியுள்ளார். இருப்பினும், பாவெலின் முழு சொத்தும் ஒரே இரவில் அவரது குழந்தைகளுக்குச் செல்லாது என்றும் வாழ்க்கையில் அவர்கள் பட்டறிவு பெறவேண்டும் என்பதால் உயில் எழுதிய நாளிலிருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சொத்து குழந்தைகளுக்குச் செல்லும் என்றும் தெரிவித்தார். அதாவது அவரது சொத்துக்கள் 2055, ஜூன் 19 அன்று அவரது 106 குழந்தைகளுக்கு பிரிந்து வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750529102.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4