மோடிக்கு பரிசளித்த குரோஷியா பிரதமர் பென்கொவிக்

#India #PrimeMinister #books #Croatia
Prasu
11 months ago
மோடிக்கு பரிசளித்த குரோஷியா பிரதமர் பென்கொவிக்

பிரதமர் மோடி அரசு மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார். 

இதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார். குரோஷியா விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குரோஷியா பிரதமர் பென்கொவிக், விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். இந்த சந்திப்பின்போது, வரலாற்றில் முதல்முறையாக அச்சிடப்பட்ட சமஸ்கிருத இலக்கண புத்தகத்தின் பிரதியை பிரதமர் மோடிக்கு பென்கொவிக் பரிசளித்தார். 

இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விஞ்ஞானியும், மிஷனரியுமான பிலிப் வெஸ்டின்(1748–1806) லத்தீன் மொழியில் 1790-ம் ஆண்டு எழுதி முதல் முறையாக அச்சிட்ட சமஸ்கிருத இலக்கண புத்தகத்தின் பிரதியை இந்திய பிரதமர் மோடியிடம் வழங்கினேன் என்று தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750358955.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!