களுபோவில கோயில் வீதியில் வீடொன்றை குறிவைத்து துப்பாக்கிச்சூடு!
#SriLanka
#GunShoot
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
11 months ago
கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில கோயில் வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது மோட்டார் சைக்கிளில் வந்து தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் வீட்டின் வாயிலிலும் வீட்டை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்போதைய விசாரணைகளின் அடிப்படையில், நிதி தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கல்கிசை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
