சுவிஸ் தூதரை அழைத்து எச்சரிக்கை விடுத்த ஈரான்

#Warning #Iran #Ambassador #Swiss
Prasu
3 months ago
சுவிஸ் தூதரை அழைத்து எச்சரிக்கை விடுத்த ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, சுவிஸ் தூதரை அழைத்து எச்சரித்துள்ளது ஈரான்.

அதாவது, 1980ஆம் ஆண்டு நிகழ்ந்த ஈரான் புரட்சி, மற்றும் ஈரானிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் 66 அமெரிக்கர்கள் பிணைக்கைதிகளாக ஈரானால் பிடித்துவைக்கப்பட்ட சம்பவம் ஆகிய நிகழ்வுகளுக்குப் பிறகு, அமெரிக்கா ஈரானுடன் தூதரக உறவுகள் வைத்துக்கொள்வதில்லை. 

ஆகவே, சுவிட்சர்லாந்து ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவுக்காக அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக செயல்பட்டுவருகிறது. 

டெஹ்ரானிலுள்ள சுவிஸ் தூதரகம்தான், ஈரானிலுள்ள அமெரிக்க குடிமக்களுக்கான பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பரிசீலனை முதலான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது. 

ஆகவேதான், இஸ்ரேல் ஈரான் தாக்கியதும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பது குறித்து அமெரிக்காவை எச்சரிப்பதற்காக, ஈரான் தரப்பு சுவிஸ் தூதரை அழைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1749889577.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!