கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு!
#SriLanka
#water
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 months ago
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (ஜூன் 11) 10 மணி நேர நீர் வெட்டு விதிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது.
அதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க-சீதுவ நகர சபை பகுதிகள் மற்றும் களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொட மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதிகளுக்கு நாளை காலை 08:30 மணி முதல் மாலை 06:30 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.
பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள சூரிய மின்சக்தி மின் இணைப்பை பிரதான மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கும், அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வாரியம் குறிப்பிட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
