திருகோணமலையில் சுவை நிலா” பலகாரக் கடையின் திறப்பு விழா!

KITES நிறுவனத்தின் வழிகாட்டலுடனும் ஊக்கத்துடனும் இன்று ஜூன் 5, 2025, “சுவை நிலா” பலகாரக் கடையின் திறப்பு விழா திருகோணமலையில் நடைபெற்றது. 10 பெண்கள் தொழில் முனைவோரால் – தமிழ் பாரம்பரிய உணவின் ஒரு புதிய தொடக்கமாக சுவை நிலா அமையப்பெறும்.
பாரம்பரிய தமிழ் உணவுகளை ஆரோக்கியமான முறையில் தயாரிக்கக்கூடிய திறமையாளர்கள், எங்களுடைய தொன்மையான உணவுப் பண்பாட்டை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர்.
மறந்த, பிரதானப்படுத்தப்படாத வரகு, சாமை, திணை போன்ற சிறுதானியங்கள் மற்றும் முப்பாட்டன் கால சமையல் முறைகளை வைத்து உருவாக்கப்படும் இக்கடையின் பலகாரங்கள், பாரம்பரியமும் சுவையும் கலந்த உணவுப் பொருட்கள் ஆகும்.
சிறு வயது பருவ நினைவுகளை தூண்டும் வகையில் தின்பண்டங்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் தயாரிக்கப்படுகின்றன. உள்ளூர் தேவையைத் திருப்திப்படுத்தும் சுத்தமும் சுவையும் கொண்ட முறுக்கு, தட்டு வடை, கற்றாழை பானங்கள்.
பாரம்பரியத்தில் பதிந்த ருசியானவை. திருமண விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கான சிறுதானிய பலகாரங்கள் — ஆரோக்கியமானவை. வெளிநாட்டிற்குச் செல்ல ஏற்ற, நீண்ட நாள் பதத்துடன் சிறிய பொதி செய்யப்பட்ட தின்பண்டங்கள்.
தினை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்களின் போசாக்கை, உங்கள் உறவுகளிடம் நினைவுகளாக கையளிக்கலாம். முக பொழிவிற்கு கடலைமா பூச்சுகள். தலைமுடிக்கு சீயக்காய் தூள். இயற்கையானது. பக்கவிளைவுகள் கிடையாது.
பாரம்பரியமும் சந்தை வாய்ப்பும்: தமிழ் பாரம்பரிய உணவு பழக்க வழக்கத்தை பாதுகாப்பதும் அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதும் முதன்மையான நோக்கம் மட்டுமல்ல — உலக சந்தையை நோக்கிய சிந்தனையும் இதில் உள்ளது.
உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் வியாபார வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தத் தயாரிப்புகள் வடிவமைக்கப்படுகின்றன. எனினும், பெரும்பாலான சிறிய வியாபார தொழில்முனைவோர் போலவே, இங்கும் எதிர்நோக்கும் சவால் சந்தைப்படுத்தல் ஆகும்.
சிறந்த தரத்தில் தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுப் பண்டங்கள் கூட, சரியான நுகர்வுச் சந்தையை அடையவில்லை என்றால் மறைந்து போகும் அபாயம் அதிகம். சந்தை வாய்ப்பை ஏற்படுத்த, KITES நிறுவனம் தொழில் வழிகாட்டியாக மட்டுமின்றி, துணையாகவும் பணியாற்றுகிறது. காட்சிப் பொருட்கள், டிஜிட்டல் ஊடக விளம்பரங்கள், சமூக ஊடகங்கள் ஊடாக முற்கூட்டியே கேள்விகளை Pre-Orders மற்றும் online வழங்கல் மூலம், இந்தச் சிறு தொழில்களுக்கு விரைவாகவும், தொடர்ச்சியாகவும் சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
ஆரோக்கிய உணவுக்காக மட்டுமல்ல — பெண்கள் சுயதொழில் முன்னேற்றம், பாரம்பரிய உணவுப் பண்பாட்டு மீட்பு, மற்றும் உலக சந்தையுடன் உள்ளூர் இணைப்பு ஆகியவற்றின் வழிகாட்டும் பாதையாக திகழ்கிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



