வாரியபொலவில் ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்க சென்றவர் பலி!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
3 months ago

வாரியபொல ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்க வாரியபொல ஆற்றின் நடுப்பகுதிக்கு நீந்தி சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆற்றில் அழுகிய நிலையில், மிதந்த சடலத்தையே அவர் மீட்க நீந்திச் சென்றுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாரியபொல - களுகமுவ வீதியில் வாரியபொல நகருக்கு அருகிலுள்ள விலக்கட்டுபொத ஆற்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீரில் மூழ்கிய நபர் அங்கு இருந்த பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறி ஆற்றின் நடுப்பகுதிக்கு நீந்தி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பின்னர் புத்தளம் கடற்படையினரால் இரு உடல்களும் கரைக்கு கொண்டு வரப்பட்டன. சம்பவம் தொடர்பில் வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



