இலங்கையில் அதிகரித்துள்ள பணவீக்கம்

#SriLanka #Lanka4
Mayoorikka
10 months ago
இலங்கையில் அதிகரித்துள்ள  பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 

 அத்துடன் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கமைய, கடந்த ஏப்ரல் மாதத்தில் மறை 2 சதவீதமாக நிலவிய கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் இந்த மாதத்தில் மறை 0.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேநேரம், கடந்த ஏப்ரல் மாதம் 1.3 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் இந்த மாதத்தில் 5.2 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. 

 அத்துடன், ஏப்ரல் மாதத்தில் மறை 3.6 சதவீதமாக இருந்த உணவல்லா பணவீக்கம் மே மாதத்தில் மறை 3.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாகத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!