ஈரான் மேல கை வைக்காதீங்க.. நேதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்

#SriLanka #world_news #Lanka4 #Iran #Trump #ADDAFLY
Mayoorikka
1 year ago
ஈரான் மேல கை வைக்காதீங்க.. நேதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்

ஈரானை தாக்க வேண்டாம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

 அமெரிக்கா ஈரானுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தை நடத்தும் போது, தாக்குதலுக்கு எதிராக டிரம்ப் எச்சரிக்கிறார். இது குறித்து டிரம்ப் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கும் என்று செய்திகள் வந்தன. 

இதைத்தொடர்ந்து ஈரானுடனான பிரச்சினை தீர்க்கப்படும் தருவாயில் இருக்கும் நேரத்தில், ஈரானை தாக்குவது பொருத்தமற்றது என்று டிரம்ப் நெதன்யாகுவிடம் கூறியுள்ளார். ஈரான்-அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. 

ஆனால் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கிறது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கப் போவதில்லை என்று முன்னர் கூறியது, ஆனால் யுரேனியம் செறிவூட்டலைக் கைவிட மறுத்தது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4