வவுனியாவில் கல்குவாரி அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு!

#SriLanka #Vavuniya #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
10 months ago
வவுனியாவில் கல்குவாரி அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு!

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோழியர்குளம் கிராமத்தில் விவசாயத்திணைக்களத்துக்குரிய குளத்தின் அலைகரையில் கல்குவாரி அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தியிருந்தனர்.

 கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளரின் அனுமதி பத்திரத்துடன் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட தயாராகிய நிலையில் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையுடன் குளத்தின் அலைகரையில் பாரம்பரிய பிள்ளையார் கோவில் இருந்தமையும் குறிப்பிட்டு அன்றைய தினத்தில் பிள்ளையார் சிலைக்கு விசேட பொங்கல் வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.

 இவ் கல்குவாரி அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறிரேலா கட்சியின் செயலாளர் நாயகம் உதயராசா மற்றும் கட்சி உறுப்பினர் கார்த்திபன் , தமிழரசு கட்சி உறுப்பினர்களான பாலேந்திரன் , சிந்துஜன் , சிவபாலன் ஆகியோருடன் அப்பகுதி கிராம மக்களும் இணைந்து இருந்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1748040119.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!