யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்! பல விடயங்கள் ஆராய்வு

#SriLanka #Jaffna #Development #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
10 months ago
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்! பல விடயங்கள்  ஆராய்வு

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றையதினம் காலை 09.30 மணியளவில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

 கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலும் வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான நா.வேதநாயகனின் இணைத்தலைமையிலும் குறித்த கூட்டமானது இடம்பெறுகின்றது.

 இக் கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி பணிகள் தொடர்பிலும் பலராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பதில் மாவட்ட செயலாளர் ம.பிரதீபன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், கே.இளங்குமரன், ஸ்ரீ பவானந்தராஜா,ஜெ.றஜீவன், இ.அர்ச்சுனா,யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், கிராம சேவகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1748040119.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!