பாகிஸ்தானில் கொட்டி தீர்த்த மழை - 14 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#weather
#Pakistan
#Rain
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 months ago

பாகிஸ்தானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் சனிக்கிழமை மாலை சிந்து மாகாணத்தின் தெற்கு மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ததால் வீடுகள் இடிந்து விழுந்தன.
பஞ்சாப் மாகாணத்திலும் பலத்த காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்து விழுந்தன, மின் கம்பங்கள் சாய்ந்தன, தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன, இதில் பல இறப்புகள் பதிவாகியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் குழந்தைகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் 45 பாகை செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்த நிலையில் தற்போது கனமழை பெய்து வருகின்றது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



