எட்டாவது கண்டத்தை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
எட்டாவது கண்டத்தை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்!

உலகில் இதுவரை 7 கண்டங்கள் மட்டுமே இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் புதியதாக 8வது கண்டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கடலுக்கு அடியில் இருக்கும் இது தோராயமாக இந்தியாவின் அளவை ஒத்ததாக இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பல வருடங்களாக கடலுக்கு அடியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்க புவி இயற்பியல் யூனியனின் டெக்டோனிக்ஸ் இதழில் இது தொடர்பான ஆய்வு வெளிவந்திருக்கிறது. சுமார் 5 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவை இந்த கண்டம் கொண்டிருப்பதாகவும், இது தொராயமாக இந்தியாவின் அளவு எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

தற்போது இந்த கண்டத்தை துல்லியமான வரைப்படமாக விஞ்ஞானிகள் மாற்றியிருக்கின்றனர். இந்த கண்டத்திற்கு 'சீலாண்டியா' எனவும் பெயரிடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக வெளியான ஆய்வில், "சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அப்போது ஒரே ஒரு கண்டம் மட்டுமே இருந்தது. அதிலிருந்து 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இது பிரிய தொடங்கியது. இது மட்டும் தனியாக நீர் நிலையில் மிதக்க தொடங்கியது. கொஞ்ச நாட்களுக்கு அது மிதந்துக்கொண்டுதான் இருந்தது.

ஆனால், பின்நாட்களில் இதன் புவி தட்டுக்கள் பலவீனமடைய தொடங்கின. விளைவு அப்படியே நீரில் மூழ்க தொடங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4