நடிகை மாலினியின் பூதவுடலுக்கு மஹிந்த மற்றும் கோட்டாபய அஞ்சலி

#SriLanka #Mahinda Rajapaksa #Gotabaya Rajapaksa #Colombo #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
10 months ago
நடிகை  மாலினியின் பூதவுடலுக்கு மஹிந்த மற்றும் கோட்டாபய அஞ்சலி

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த, மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஞாயிற்றுக்கிழமை (25) அன்று அஞ்சலி செலுத்தினர்.

 'இலங்கை சிங்கள சினிமாவின் அரசி' என்று வர்ணிக்கப்படும் பிரபல நடிகை மாலினி பொன்சேகா தனது 78வது வயதில் நேற்று முன்தினம் (24) கொழும்பில் காலமானார்.

 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஏராளமான விருதுகளை வென்றுள்ள அவரது சினிமா நடிப்பு ஈடு இணையற்றது என பல தரப்பிலும் மெச்சப்படுகிறது.

 அந்தவகையில், மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில், அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலியையும் இரங்கல்களையும் செலுத்தி வருகின்றனர்.

 தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் மாலினி பொன்சேகாவின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!