சளி இருமல் காரணமாக யாழில் இரண்டு மாத குழந்தை உயிரிழப்பு!
#SriLanka
#Jaffna
#Hospital
#Lanka4
#baby
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
6 months ago
சளி மற்றும் இருமல் காரணமாக சிகிச்சை பெற்ற இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் செரின் என்ற இரண்டு மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை சளி மற்றும் இருமல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் நேற்று முன்தினம் (24) சனிக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை நெல்லியடி பொலிஸார் நெறிப்படுத்தினர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
